உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாங் பெனார்
 KB10  | Seremban Line கொமுட்டர்

UKM Komuter Station
பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம் (2202)
பொது தகவல்கள்
அமைவிடம்பத்தாங் பெனார், சிரம்பான் மாவட்டம்
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்2°49′48″N 101°49′36″E / 2.83000°N 101.82667°E / 2.83000; 101.82667
உரிமம் தொடருந்து சொத்துரிமை
இயக்குபவர் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்  புலாவ் செபாங் 
 காஜாங் 
மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB10 
வரலாறு
திறக்கப்பட்டது KB10  1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   மலாயா தொடருந்து   அடுத்த நிலையம்
   
பாங்கி
பத்துமலை
 
 புலாவ் செபாங் 
 
நீலாய்
தம்பின்
அமைவிடம்
Map
பத்தாங் பெனார் நிலையம்

பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batang Benar Komuter Station; மலாய்: Stesen Komuter Batang Benar) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், பத்தாங் பெனார் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]

இந்த நிலையம் பாஜம் சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும்; பழைய நீலாய் நகரம்; மற்றும் நீலாய் கொமுட்டர் நிலையம்; ஆகியவற்றில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த நிலையம் பத்தாங் பெனார் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[2]

சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.

பொது

[தொகு]

இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 4 வழித்தடங்கள் உள்ளன. பத்தாங் பெனார் நிலையத்தில் நிற்காத தொடருந்துகள், நிலையத்தின் நடுவில் உள்ள இரண்டு வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[3]

நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.

பத்தாங் பெனார் பயணிகள்

[தொகு]

பத்தாங் பெனார் நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த நிலையத்தை அதிக அளவிலான பத்தாங் பெனார் நகரத்தின் பயணிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் ஓரளவிற்கு வசதியாக உள்ளது. நிலையத்திற்கு வெளியே சிறிய அங்காடிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பழங்கள், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிப் பொருட்கள் விற்கப் படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

பத்தாங் பெனார் நிலையக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Batang Benar KTM station is a KTM Komuter train station located near and named after the small town of Batang Benar, Negeri Sembilan". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  2. "Batang Benar KTM Komuter Station is a KTM Komuter train station located near and named after the small town of Batang Benar, Negeri Sembilan". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "Komuter trains from Batang Benar run on the Seremban KTM Line (KTM Laluan Seremban) and duration of the train journey to KL Sentral station is approximately 60 minutes". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]